நடிகை அஞ்சலியை இம்மாதம் 9-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு காவல் துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அஞ்சலியின் சித்தி எஸ்.பாரதி தேவி மனு தாக்கல் செய்துள்ளார். எனது சகோதரி பார்வதி தேவியின் மகள் அஞ்சலியைத் தத்தெடுத்து நான் வளர்த்து வருகிறேன். இயக்குநர் களஞ்சியம் மூலம் திரைப்படத்தில் அறிமுகமான அஞ்சலி தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ஹைதராபாதில் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக எனது கணவருடன் கடந்த மார்ச் 31-ம் தேதி ஹைதராபாத்துக்கு அஞ்சலி சென்றார். அங்கு ஓட்டலில் தங்கியிருந்த அஞ்சலி கடந்த ஏப்ரல் 8-ம் தேதி காணாமல் போனார். அஞ்சலியைக் கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு காவல் துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் பாரதி தேவி கோரியுள்ளார்.
இந்த மனு, நீதிபதிகள் வி.தனபாலன், சி.டி.செல்வம் ஆகியோரைக் கொண்ட அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞர் தம்பிதுரை, தன்னை யாரும் கடத்தவில்லை என்று கூறி ஹைதராபாத் மாநகர காவல் துணை ஆணையர் முன்னிலையில் அஞ்சலி ஆஜராகியுள்ளார் என்று தெரிவித்தார்.
இதனையடுத்து அஞ்சலியை இம்மாதம் 9-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு காவல் துறையினருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !