பெங்களூர்: மாரடைப்பால் இறந்த இளம் கன்னட நடிகர் ஹேம்ந்த் இறக்கும் முன்பு இரண்டு வார்த்தைகளை எழுத்து மூலமாக தெரிவித்துள்ளார். கன்னட நடிகர் ஹேமந்த்(24). அவர் நடித்த முதல் படம் கடந்த மார்ச் மாதம் வெளியானது. மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ஹேமந்த் நேற்று பெங்களூரில் உள்ள எம்.எஸ். ராமையா நாராயண ஹ்ருதாலயா மருத்துவமனையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 5 முதல் 6 மணிநேரம் கழித்து அன்று இரவு 2 மணிக்கு எம்.எஸ். ராமையா நாராயண ஹ்ருதாலயா மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
மாரடைப்பு:
ஹேமந்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதையும், ரத்த அழுத்தம் மிகவும் குறைந்துள்ளதையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவருக்கு சிகிச்சையை துவங்கும் முன்பு பல முறை எலக்ட்ரிக் ஷாக் கொடுத்துள்ளனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அதிகாலையில் உயிர் இழந்தார்.
ஒரு நாளைக்கு 6 பாக்கெட் சிகரெட்:
ஹேமந்த் நாள் ஒன்றுக்கு 6 பாக்கெட் சிகரெட் குடித்து வந்துள்ளார். இந்த பழக்கம் தான் அவரது உயிரை வாங்கிவிட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கடைசி வார்த்தை:
ஹேமந்த் தனது உயிர் பிரியும் முன்பு பேப்பரும், பேனாவும் கேட்டுள்ளார். அதில் அவர் புகைப்பிடிக்காதீர்கள் என்று எழுதிவிட்டு இறந்துவிட்டார்.
தொடர்புடைய செய்தி
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !