எகிப்து நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தை தொடர்ந்து அந்நாட்டு ஜனாதிபதி மோர்ஸியை இராணுவம் அதிரடியாக பதவியில் இருந்து நீக்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்து நாட்டின் ஜனாதிபதியாக நீண்ட காலம் பதவி வகித்து வந்த ஹோஸ்னி முபாரக்கை பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டம் வெடித்தது. இதனையடுத்து முபாரக் அதிரடியாக நீக்கப்பட்டு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் முகம்மது கோர்ஸி ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் மோர்ஸிக்கு எதிராக போராட்டம் வெடித்தது. ஜனாதிபதியின் ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கலவரம் மூண்டது. இதனை அடுத்து ஜனாதிபதி மோர்ஸி அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சியில் மோர்ஸி பேசுகையில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் பதவி விட்டு விலக மாட்டேன். நாட்டுக்காக தொடர்ந்து பாடுபடுவேன் எனக் கூறினார். தொடர்ந்து நடைபெற்ற வன்முறை சம்பவங்களினால் சுமார் 15-க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
ஜனாதிபதியை நீக்க வலியுறுத்தி நடைபெறற போராட்டம் வன்முறையாக மாறியதையடுத்து இராணுவம் மோர்ஸி பதவி விலக 48 மணி நேரம் கெடு விடுத்தது. இராணுவம் விடுத்திருந்த கெடு முடிந்தநிலையில் இராணுவம் தலைநகர் கெய்ரோவில் உள்ள ஜனாதிபதி மாளிகையை அதிரடியாக முற்றுகையிட்டது.
இதனை தொடர்ந்து ஜனாதிபதி பதவி விலகியதாகவும், அரசியல் சாசன சட்டத்தை ரத்து செய்வதாகவும் இராணுவம் அதிரடியாக அறிவித்தது. மேலும் விரைவில் தேர்தல் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இடைக்கால ஜனாதிபதியாக எகிப்து நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபயான மகர் எல் பெஹய்ரி பதவி வகிப்பார் என இராணுவ தளபதி அபடெல் அல் சிசி தெரிவித்துள்ளார்.
முன்னதாக மோர்ஸியின் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த நான்கு அமைச்சர்கள் தங்களது பதவியை இராஜினாமா செய்தனர். மேலும் பதவி நீக்கம் செய்யப்பட்ட மோர்ஸி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் வெளிநாட்டிற்கு செல்வதை தடுக்கவும் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !