அரக்கோணம் அசோக்நகர் அன்னை சிவகாமி தெருவை சேர்ந்தவர் அருள் (55). பொலிஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்த இவர் விருப்ப ஓய்வு பெற்றார்.
இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால், அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்றும் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்துள்ளார். பின்னர் தனது படுக்கையில் தூங்க சென்றார்.
அப்போது அவரது மகன் மைக்கேல் (25) என்பவர் தந்தை என்று கூட பார்க்காமல் தூங்கிகொண்டிருந்த அருள் தலையில் கல்லை தூக்கி போட்டார்.
இதனால தலையில் பலத்த காயமடைந்த அருளை மீட்டு அரக்கோணம் அரசு வைத்தியசாலையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இது குறித்து அரக்கோணம் டவுன் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !