Headlines News :
Home » » இனிய நினைவுகள் தரும் இரவை நினைத்து பயப்படும் யுக்தாமுகி: கணவனின் கொடூரங்கள், பரபரப்பு பேட்டி!

இனிய நினைவுகள் தரும் இரவை நினைத்து பயப்படும் யுக்தாமுகி: கணவனின் கொடூரங்கள், பரபரப்பு பேட்டி!

Written By TamilDiscovery on Wednesday, July 10, 2013 | 12:13 AM

முன்னாள் உலக அழகி யுக்தாமுகி கடந்த 2008–ல் பிரின்ஸ் துலியை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.

யுக்தாமுகி தமிழ், ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். தற்போது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளார்.

இதுகுறித்து யுக்தாமுகி அளித்த பேட்டி வருமாறு:-

திருமணமான ஒரு மாதத்திலேயே குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்பட்டன. திருமணத்துக்கு முன்பு பிரின்ஸ் மேல் எந்த தவறையும் காண முடியவில்லை. அவர் சுயரூபம் தாமதமாகத்தான் தெரிந்தது. பிரின்ஸ் சகோதரி திருமணத்துக்கு முன்பே என்னை சந்தித்து எனது சம்பாத்தியம் பற்றி கேட்டார். எவ்வளவு வருமானம் வருகிறது. அந்த பணத்தை என்ன செய்கிறாய். எங்களிடம் கொடுப்பாயா இல்லை நீயே வைத்துக்கொள்வாயா என்றெல்லாம் கேள்விகள் எழுப்பினார். மும்பையில் எனக்குள்ள வீடுகள் யார் பெயரில் இருக்கின்றன என்றும் கேட்டார். பிரின்ஸ்க்கும் அவர் குடும்பத்தினருக்கும் மன ரீதியான பிரச்சினைகள் உள்ளன. என்னை பல வகையில் துன்புறுத்தினார்கள். பிரின்சின் மூத்த சகோதரர் போதை பொருள், மது பழக்கத்தில் இறந்தார். பிரின்சிக்கு கோபம் வந்தால் கொடூரமாக மாறி விடுவார்.

என்னை அடிப்பார், மிரட்டுவார் நடிக்க கூடாது என்று தடுத்தார். வீட்டிலேயே அடைபட்டு கிடந்தேன். நான் ஆடை உடுத்துவதையும் கேவலமாக பேசினார்.

என் சொத்துக்களை கேட்டார். குழந்தையை என்னிடம் இருந்து பிரித்து விடுவதாக எச்சரித்தார். என் குடும்பத்தினரை விபத்தில் சாகடித்து விடுவதாகவும் மிரட்டினார். மந்திரி தனது கையில் இருப்பது போல் பேசினார். ஒவ்வொரு நாள் நள்ளிரவிலும் என்னை பாலியல் சித்ரவதை செய்தார். இதனால் இரவு வந்தாலே பயப்பட ஆரம்பித்து விடுவேன்.

நிறைய பெண்களுடன் பிரின்சுக்கு தொடர்பு இருந்தது. அவர்களுடன் சேர்ந்து சுற்றினார். எனக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டு. அதுதான் என்னை காப்பாற்றியது.

இவ்வாறு கூறினார்.

தொடர்புடைய செய்தி
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template