பாலிவுட் நடிகரான ஹிருத்திக் ரோஷனுக்கு சில மாதங்களுக்கு முன்னர் ‘பேங்க் பேங்க்’ படப்பிடிப்பின் போது தலையில் காயம் ஏற்பட்டது.
இந்த விபத்திற்குப் பின்பு அவருக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டது.
இந்த காயத்தின் விளைவாக மண்டை ஓட்டிற்கும் மூளைக்கும் இடையே நரம்பில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. ரத்தக் கசிவை நிறுத்த உடனடியாக சத்திரசிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனையடுத்து, மும்பை கர் பகுதியில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் இன்று ஹிருத்திக் ரோஷனுக்கு தலையில் சத்திரசிகிச்சை நடத்தப்பட்டது.
நரம்பியல் நிபுணர் மருத்துவர் பி.கே. மிஷ்ரா வெற்றிகரமாக நடத்திய இந்த சத்திரசிகிச்சை சுமார் 45 நிமிடம் நீடித்ததாகவும் ஹிருத்திக் ரோஷன் நலமாக இருப்பதாகவும் அவரது தந்தை ராகேஷ் ரோஷன் கூறியுள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !