ஜப்பான் பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரின் வாயில் ஆசிரியர் டேப் ஒட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானில் மாணவ-மாணவிகள் மதிய உணவை தங்கள் வகுப்பறையில் வைத்தே சாப்பிடுவது வழக்கம். அவ்வாறு சாப்பிடும்போது, சாப்பாடு பரிமாறும் மாணவிகள் தங்கள் வாய் மற்றும் மூக்கை மறைக்கும் ‘மாஸ்க்’ எனப்படும் முகக்கவசம் அணியவேண்டும் என்று பெரும்பாலான பாடசாலைகள் அறிவுறுத்தியுள்ளன.
இதனை மீறும் குழந்தைகளை ஆசிரியர்கள் கடுமையாக கண்டிக்கின்றனர்.
இந்தநிலையில் வடக்கு டோக்கியோவின் டோச்சிகியில் உள்ள ஒரு பாடசாலை ஒன்றில் இன்று மதிய உணவு பரிமாறிய 7 வயது சிறுமி, மாஸ்க் அணியவில்லை. இதனால் அவரை ஆசிரியர் கண்டித்துள்ளார். அப்போது அந்த சிறுமி தனது மாஸ்க்கை எடுத்து வர மறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து ஆசிரியர், அந்த சிறுமியின் வாயில் இருந்து மற்றவர்களுக்கு கிருமிகள் பரவாமல் தடுக்கும் வகையில் வாயில் டேப் ஒட்டியிருக்கிறார்.
இச்சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, சம்பந்தப்பட்ட சிறுமி மற்றும் அவரது பெற்றோரிடம் ஆசிரியர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
Home »
World
» ஜப்பான் பாடசாலை ஒன்றில் ஆசிரியர் மாணவியின் வாய்க்கு பிளாஸ்ரர் ஒட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது!
ஜப்பான் பாடசாலை ஒன்றில் ஆசிரியர் மாணவியின் வாய்க்கு பிளாஸ்ரர் ஒட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது!
Written By TamilDiscovery on Wednesday, July 3, 2013 | 6:00 AM
Labels:
World
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !