கியூடோ: லண்டனில் உள்ள ஈக்குவடார் நாட்டு தூதரகத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒட்டு கேட்பு கருவி கண்டுபிடிக்கப்பட்டு அதை ஊடகங்கள் முன்பாக அம்பலப்படுத்தியது அந்நாட்டு அரசு.
உலக நாடுகள் அனைத்தையும் அமெரிக்கா வேவு பார்க்கிறது என்று பெரும் குண்டைத் தூக்கிப் போட்டார் அமெரிக்காவின் ஸ்னோடென். இதைத் தொடர்ந்து அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு இப்போது நாடற்றவராக மாஸ்கோ விமான நிலையத்தில் 10 நாட்களுக்கும் மேலாக முடங்கி உள்ளார் அவர்.
லண்டன் ஈக்குவடார் தூதரகத்தில் பொருத்தப்பட்ட ஒட்டுக் கேட்பு கருவி கண்டுபிடிப்பு!
இந்நிலையில் பிறநாட்டு தூதரகங்களையும் அமெரிக்கா வேவு பார்த்த சம்ப்வமும் அடுத்த அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து லண்டனில் உள்ள ஈக்குவடார் தூதரகத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒட்டுக் கேட்பு கருவி கண்டுபிடிக்கப்பட்டது. இக்கருவியை இங்கிலாந்து நிறுவனம் ஒன்று பொருத்தியிருக்கிறது. இந்தக் கருவியை செய்தியாளர்களிடம் ஈக்குவடார் வெளியுறவு அமைச்சர் செய்தியாளர்களிடம் காண்பித்தார்.
இதே ஈக்குவடார் தூதரகத்தில்தான் விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே கடந்த ஓராண்டுகாலமாக தஞ்சம் புகுந்து இருக்கிறார். அவர் தூதரகத்தை விட்டு வெளியே வருவதே இல்லை. அப்படி வெளியே வந்தால் அவர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படக் கூடும் என்ற நிலை இருக்கிறது. இந்நிலையில் அதே தூதரகத்தில்தான் இத்தகைய ஒட்டு கேட்புக் கருவி பொருத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இருப்பினும் ஈக்குவடார் அமைச்சர், இங்கிலாந்து அரசை விமர்சிக்காமல், உலக நாடுகள் இப்படி சட்டவிரோதமாக நடந்து கொள்வதாக கூறி பொதுவான விமர்சனத்தையே முன்வைத்தார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !