சிரியாவில் ஜனாதிபதி பஷீர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக மக்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களில் பலர் ஆயுதமேந்தியும் போராடி வருகின்றனர். ஆயுதப் போராளிகளை நசுக்கி வீழ்த்த பஷீர் அல் ஆசாத் ராணுவத்தை ஏவி விட்டுள்ளார்.
இரு தரப்பினருக்கும் இடையே நடக்கும் மோதல்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். பல லட்சம் மக்கள் வீடுகளை இழந்து அண்டை நாடுகளான துருக்கி, லெபனான் உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர். அதிபருக்கு எதிராக போராடி வரும் குழுக்களுக்கு அமெரிக்காவின் உளவுத் துறையான சி.ஐ.ஏ. ஆயுத உதவி செய்து வருவதாக சிரியா அரசு குற்றம் சாட்டி வருகிறது.
இதனை ஒப்புக் கொண்டுள்ள அமெரிக்கா வெளிப்படையாகவே ஆயுத உதவிகளை வழங்க தயாராக உள்ளதாக அறிவித்தது.
இந்த ஆயுதங்கள் இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் சிரியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சிரியாவுக்குள் அமெரிக்க ஆயுதங்களை கொண்டு வர உதவிய கிறிஸ்தவ பாதிரியார் மற்றும் ஒரு கிறிஸ்தவரின் தலைகளை துண்டித்த காட்சி தற்போது இணையதளத்தில் உலா வரத்தொடங்கியுள்ளது. கைகள் கட்டப்பட்ட நிலையில் இட்லிப் என்ற இடத்தில் ஏராளமான பொதுமக்களின் முன்னிலையில் ஆசாத்தின் ஆதரவாளர்கள் இவர்களின் தலைகளை துண்டிக்கும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.
துண்டித்த தலைகளை உடலில் இருந்து எடுத்தும், பின்னர் உடலுடன் பொருத்தியும் அவர்கள் செய்யும் வேடிக்கைகளை ஏராளமான பொதுமக்கள் கைதட்டி ரசித்து உற்சாக கூச்சலிடுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !