Headlines News :
Home » » எய்ட்ஸ் என்னும் ஆட்கொல்லி நோயால் உலகம் முழுவதும் 1 கோடி பேர் பாதிப்பு: 2015-ம் ஆண்டில் 65 லட்சம் பேர் பலியாவார்!

எய்ட்ஸ் என்னும் ஆட்கொல்லி நோயால் உலகம் முழுவதும் 1 கோடி பேர் பாதிப்பு: 2015-ம் ஆண்டில் 65 லட்சம் பேர் பலியாவார்!

Written By TamilDiscovery on Monday, July 1, 2013 | 1:02 PM

உலகை அச்சுறுத்தி வரும் எய்ட்ஸ் என்னும் ஆட்கொல்லி நோயானது கடந்த 32 ஆண்டுகளாக உலகம் முழுவதும் பரவி வருகிறது.

2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உலக அளவில் எய்ட்ஸ் நோயால் பாதித்தவர்களில் 70 சதவீதம் பேர் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. ஆனால், தற்போதைய கணக்கெடுப்பின்படி உலகம் முழுவதும் 1 கோடி பேரை கடுமையான எய்ட்ஸ் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதுடன் அவர்கள் எய்ட்ஸ் நோய்க்கான மருந்து மாத்திரைகள் சாப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த அதிர்ச்சி தகவலை ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

மேலும் வருகிற 2015-ம் ஆண்டில் 65 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் மரணம் அடைவர். அல்லது பாதிக்கப்படுவர் என்றும் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளதாக ஐ.நா சபை அறிவித்துள்ளது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template