பழம்பெரும் திரைப்பட இயக்குனர், ஆஸ்கார் மூவீஸ் பாஸ்கர், 75, நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார்.
அவரது இறுதி சடங்கு, சென்னையில் இன்று நடக்கிறது. தமிழ் படங்களில், வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்த, ரஜினிகாந்தை முதன் முதலில் கதாநாயகனாக, "பைரவி படத்தில் அறிமுகம் செய்தவர் இயக்குனர், "ஆஸ்கார் மூவீஸ் பாஸ்கர். இவர், "தீர்ப்புகள் திருத்தப்படலாம், பவுர்ணமி அலைகள், சட்டத்தின் திறப்பு விழா, சக்கரவர்த்தி, சூலம், தோட்டா உட்பட, 13 படங்களை இயக்கியுள்ளார்; சில படங்களை தயாரித்தும் உள்ளார்.Tamil Discovery.com
சென்னை, ராயப்பேட்டை லட்சுமிபுரத்தில், வசித்து வந்த பாஸ்கர், சில மாதங்களாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். வீட்டிலிருந்தபடி சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று மாரடைப்பால் இறந்தார்.
பாஸ்கருக்கு, மீனா ராணி என்ற மனைவியும், பாலாஜி என்ற மகனும், ஜானகி ப்ரியா, மாரியப்பாபு என்ற மகள்களும் உள்ளனர். பாஸ்கரின் உடலுக்கு நேற்று மாலை, திரையுலகத்தினர் அஞ்சலி செலுத்தினர். இறுதி சடங்கு, சென்னை, கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில், இன்று காலை நடக்கிறது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !