நயன்தாராவுக்கு இப்போது ரொம்ப நல்ல காலம். அவர் தொட்டதெல்லாம் துலங்குகிறது. அதனால் இதே வேகத்தில் சென்று தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முக்கிய இடத்தை பிடித்துக்கொள்ள வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறார்.
தமிழில் அஜீத், ஆர்யா, உதயநிதி போன்ற நடிகர்களுடன் நடித்திருப்பவர், இப்போது தெலுங்கில் அனாமிகா என்ற படத்தில் நடிக்கிறார். இது வித்யாபாலன் நடித்த கஹானி படத்தின் ரீமேக் என்பதால், இந்த படம் தன்னை பெரிய அளவில் கொண்டு செல்லும் என்பது நயன்தாராவின் நம்பிக்கையாக உள்ளது. அதனால் கன்னடம், ஹிந்தியிலிருந்து வந்த வாய்ப்புகளைகூட திருப்பி அனுப்பிவிட்டார் நயன். இதுபற்றி நெருக்கமானவர்கள் நயன்தாராவிடம் கேட்டபோது, இந்திய அளவில் பெரிய நடிகையாக வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் உண்டு. ஆனால், எனக்கு துரோகம் செய்த பிரபுதேவா ஹிந்தியில் இருப்பதால் அங்கு செல்வதில் எனக்கு நாட்டமில்லை. அதனால்தான், தமிழ், தெலுங்கோடு எனது எல்லையை அமைத்துக்கொண்டு பிரதான நடிகை என்ற இடத்தை பிடிக்க முயற்சி எடுத்து வருகிறேன் என்று கூறியுள்ளார் நயன்தாரா.
மேலும் கஹானியைத் தொடர்ந்து இன்னும் அதிரடியான மாறுபட்ட கதைகளாக தேர்வு செய்து நடிக்கப் போவதாகவும் அவர் கூறிவருகிறார்.
தற்போது தெலுங்கில் அனுஷ்கா நடித்து வருவது போன்ற சரித்திர கதைகளில் நடிப்பதிலும் நயன்தாராவுக்கு ஈடுபாடு ஜாஸ்தியாக உள்ளதாம்.
எனக்கு துரோகம் செய்த பிரபுதேவா ஹிந்தியில்: அங்கு செல்ல மாட்டேன் நயன்தாரா!
Written By TamilDiscovery on Wednesday, July 10, 2013 | 7:15 AM
Related articles
Labels:
Cinema
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !