உலக நாடுகளின் இணைய பயன்பாட்டாளர்களை உளவு பார்த்து அதன் விபரங்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடென்(Edward snowden) ஜெர்மனியில் புகலிடம் கோரியிருந்தார்.
கோரிக்கையினை முதலில் நிராகரித்த ஜேர்மன் நாடானது தற்போது மறுபரிசீலனை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் விக்கிலீஸ் தங்களது வலையதளத்தில் ஸ்னோடென் முறையீடு செய்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
கடந்த வாரங்களாக அவர் ரஷ்யாவின் மாஸ்கோ விமான நிலையத்தில் பதுங்கி இருந்தார் என்றும் 19 நாடுகளிடம் அடைக்கலம் கேட்டுள்ளதாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளிட்டுள்ளது. இதன் அறிக்கையில் அமெரிக்க நாடானது அவரது கடவுச்சீட்டை தடுத்த நிறுத்தியது. தற்போது அடுத்த ஆயுதமாக அவரது குடியுரிமையை கையில் எடுத்துள்ளது. ஒரு வார காலமாக பல்வேறு இடங்களில் மறைந்த வாழ்ந்த அவர் தற்போது ஒபாமா துரோகம் செய்துள்ளார் என குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் ரஷ்யாவின் மாஸ்கோவில் தங்கியுள்ள அவர் சரணடைவதற்கு ரஸ்யாவிடம் உயர்மட்ட பேச்சு வார்த்தை மேற்கொள்ளப்படும் என ஒபாமா அவர்கள் தான்ஜானியா நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் ஜேர்மன் அதிபர் ஏஞ்சலோ மெர்க்கல்(Angelo Merchel) அவர்களின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஸ்னோடெனின் புகலிடம் தொடர்பான கோரிக்கை ஜெனிவாவில் கலந்து முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !