சிம்பாப்வேயில் பிரசவ வலியால் கத்தும் பெண்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் அமைப்பின் மூலம் அம்பலமாகியுள்ளது.
உலக நாடுகளில் நிலவிவரும் லஞ்சம் ஊழல் தொடர்பான தகவல்களை ‘டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பு ஆய்வு செய்து சமீபத்தில் முடிவுகளை அறிவித்தது. ஆப்பிரிக்க நாடுகளில் லஞ்சம் பெருத்து வருவதாக அந்த ஆய்வறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. தனிநபர் வருமானத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள சிம்பாப்வேயில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. வேதனைக்குரிய விஷயமாக பிரசவ வலியால் கத்தினால் கூட லஞ்சம் தரவேண்டும் என்பது அங்கு எழுதப்படாத விதி.
பொலிஸாருக்கு அடுத்தபடியாக லஞ்ச ஊழல் மலிந்த துறையாக 68 சதவீத சிம்பாப்வே மக்கள் மருத்துவ துறையை குறிப்பிடுகின்றனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !