ஓரினச் சேர்க்கையாளர்களை தடை செய்யும் புதிய சட்டத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அனுமதி அளித்துள்ளார்.
ரஷ்யாவின் கலாச்சார மாண்புகளை சீர்குலைக்கும் ஓரினச்சேர்க்கையாளர்களை தடை செய்யும் புதிய சட்டம் ஜூன் மாதம் ரஷ்ய பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. சென்றவாரம் பாராளுமன்ற மேல்சபையும் இதற்கு ஒப்புதல் அளித்தது.
இந்த புதிய சட்டத்தின்படி ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதும், இதுதொடர்பாக குழந்தைகளுக்கு விளக்கம் அளிப்பதும் கடுமையான குற்றமாக கருதப்பட்டு தண்டனை வழங்கப்படும். ஆண் மற்றும் பெண் ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் போன்றோர் ஊர்வலம், பேரணி ஆகியவற்றை நடத்துவதையும் இந்த சட்டம் தடை செய்கிறது. இந்த சட்டத்தை மீறிய வகையில் செயல்படுவர்களுக்கு சிறை தண்டனையும், பெருந்தொகை அபராதமும் விதிக்கப்படும்.
இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து ரஷ்ய புடின் நேற்று கையொப்பமிட்டுள்ளார்.
எனவே, ஓரினச் சேர்க்கையாளர் என்று சந்தேகப்படும் நபர்கள் பற்றி யாராவது தகவல் அளித்தால் இந்த சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தி தண்டனை வழங்க முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !