திருகோணமலை உட்துறைமுக கடல் பகுதியில் நேற்று திமிங்கல ரக பாரிய மீன் உள் நுழைந்ததனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று நண்பகல் வேளையில் உட்துறைமுக கடலில் குறித்த மீன் நடமாடியதுடன் அதன் சுவாசத்தின் காரணமாக கடல்நீர் பீச்சியடிக்கப்பட்டது. இதனையும் மீனின் நடமாட்டத்தையும் காண அதிகளவிலான மக்கள் உட்துறைமுக பிரதான வீதியில் திரண்டிருந்தனர்.
நண்பகல் வெயிலையும் பொருட்படுத்தாது இளைஞர், யுவதிகள் திரண்டு மீனின் நடமாட்டத்தை அவதானித்ததை குறிப்பிடத்தக்கது.
நீலக்கடலில் இம்மீன்களின் நடமாட்டம் மிகவும் கவரும் வகையில் அமைந்திருந்ததுடன் பலருக்கும் பொழுதுபோக்காகவும் இருந்தது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !