தன்னிடம் வரும் பெண்களின் முகம் அழகாக மிளிரவேண்டும் என்பதற்காக பெண்ணொருவர் நத்தை பேஷியலை செய்து வருகின்றார்.
ஜப்பான் டோக்கியோவைச் சேர்ந்த மானமி டாக்கமுறா என்ற பெண்ணே இத்தகைய நத்தை பேஷியலை தொடர்ந்து வருகின்றார்.
இவர், டோக்கியோவை தளமாக கொண்டு இயங்கிவரும் அழகு சிகிச்சை நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றார். தனது அழகு சிகிச்சை நிலையத்திற்கு முகத்தை அழகுபடுத்திகொள்ள வரும் பெண்களுக்கு இவர் நத்தை சிகிச்சைகயை அளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சிறு எறும்பு முகத்தில் ஓடினால்கூட அந்த எறும்பை பிடித்து நசுக்கி எறிந்துவிடுவதே எமது ஒவ்வொருவரினதும் வழமையான செயற்பாடு.
ஆனால், இவரோ நத்தைகளின் நன்மைகளை உணர்த்துவதற்காக பெண்களின் முகத்தில் நத்தைகளை ஊர்ந்துசெல்ல விடுகிறார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:
'இந்த நத்தை பேஷியல் சிகிச்சையின் மூலம் முகத்தில் ஏற்கனவே காணப்படும் பருக்கள், முகச் சுருக்கம், கரும்புள்ளிகள் என்பவை நீங்கி முகம் புதுபொழிவுடன் பிரகாசிக்கின்றது.
இந்த சிகிச்சை முறைக்கு 5 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படுகின்றது.
பெண்களது முகத்தில் நத்தைகளை விட்டவுடன் கூச்சத்தில் தடுமாறும் பெண்கள் பின்னர் அதனது தொடுகையை பழக்கப்படுத்திகொண்டு விடுகின்றனர். பின்னர் உறங்கிவிடுகின்றனர்.
தற்போது ஜப்பானில் இந்த சிகிச்சை முறை பெண்களிடம் வேகமாக பரவி வருகின்றது. நத்தைகள் முகத்தில் ஊர்ந்துபோகும்போது அதிலிருந்து சுரக்கும் நீர் முகத்தில் காணப்படும் இறந்த செல்களை நீக்குவதற்கு உதவுகின்றது. சூரிய ஒளியினால் முகத்தில் ஏற்படும் கருமையை அகற்றி வறண்ட முகத்திற்கு ஈரழிப்பை கொடுக்கின்றது.
நத்தையில் இருந்து சுரக்கும் நீரானது சருமத்தில் முதிர் தோற்றத்தை குறைக்க உதவுகின்றது.
சந்தையில் காணப்படும் அநேகமான அழகு சாதனப் பொருட்களில் நத்தையிலிருந்து சுரக்கும் நீர் சேர்க்கப்பட்டுள்ளது. பேஷியல் செய்வதற்காக வரும் பெண்களுக்கு ஒருபடி மேலாக நேரடியாக நத்தையிலிருந்து வெளியாகும் நீர் கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நத்தைகள் முகத்தில் ஊர்ந்து செல்லும் போது அது கூச்ச உணர்வை தந்தாலும் அது மிகவும் நன்றாக இருந்தது. இப்போது எனது சருமம் மிகவும் மிருதுவானதாக உள்ளதை என்னால் அவதானிக்க முடிகின்றது.
இந்த சிகிச்சை முறை ஆரம்பிப்பதற்கு முன்பாக முகத்தை நன்கு சுத்தம் செய்யவேண்டும். எப்போதும் கன்னம் மற்றும் நெத்தி பகுதிகளிலேலே இவை பிரதானமாக வைக்கப்பட்டு ஊர்ந்து செல்லவிடப்படும். பின்பு அவை முகத்தை சுற்றி ஊர்ந்துசெல்லும்.
இந்த நத்தை சிகிச்சையானது நம்மை ஓய்வாகவும் வைத்துகொள்கிறது. ஏனெனில் நத்தைகள் முகத்தில் ஊர்ந்தும் செல்லும்போது நாம் இயல்பாகவே நித்திரையில் ஆழ்ந்துவிடுவோம்" என அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !