Headlines News :
Home » » வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் இளவரசி கேத் மிடில்டன்!

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் இளவரசி கேத் மிடில்டன்!

Written By TamilDiscovery on Monday, July 22, 2013 | 3:55 AM

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியின் மூத்த மகன் வில்லியமுக்கும் கேத் மிடில்டனுக்கும் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. தற்போது கேத் மிடில்டன் கர்ப்பமாக இருக்கிறார்.அவருக்கு பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பது குறித்து சூதாட்டமும் நடைபெற்று வருகிறது.

இளவரசி கேத் மிடில்டனுக்கு, அவரது கணவர் இளவரசர் வில்லியம் பிறந்த தனியார் வைத்தியசாலையில் பிரசவம் நடத்த அரச குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். இந்த வைத்தியசாலையின் பெயர் லிங்டோ விங் ஆப் செயின்ட் மேரீஸ். இது மேற்கு லண்டனில் பேட்டிங்டன் என்ற இடத்தில் உள்ளது. இங்கு தான் இளவரசர் சார்லசும், அவரது மகன்கள் வில்லியம் மற்றும் ஹாரியும் பிறந்தனர்.

இதற்கிடையே, இளவரசி கேத் மிடில்டன் (சிசேரியன்) ஆபரேசன் மூலம் குழந்தை பெற விரும்ப வில்லை. இயற்கையான முறையில் குழந்தை பெறவே விரும்புகிறார். அதற்கான வார்டில் தான் பிரசவத்துக்காக அவர் அனுமதிக்கப்பட உள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்று பிரசவ வலி ஏற்பட்டது. எனவே, இன்று காலை அவர் மேற்கு லண்டனில் பட்டிங்டனில் உள்ள செயின்ட் மேரீஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

முன்னதாக அரண்மனையில் இருந்து அவர் கார் மூலம் அழைத்து செல்லபட்ட போது கணவர் இளவரசர் வில்லியமும் உடன் சென்றார்.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template