மெக்சிக்கோ நாட்டில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பிரமிட்களையும், 30 எலும்புக்கூடுகளையும் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
வெராக்ருஸ் பகுதியின் தென்கிழக்கில் உள்ள ஜல்டிபன் நகரில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக பள்ளம் தோன்டிய போது இவை கண்டுபிடிக்கப்பட்டன.
கி.பி. முதல் நூற்றாண்டில் தொடங்கி 700ம் நூற்றாண்டு வரை பயன்பாட்டில் இருந்த பழங்கால நகரமாக ஜல்டிபன் இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். கண்டெடுக்கப்பட்ட 30 எலும்புக்கூடுகளில் 2 குழந்தைகளுக்குரியது என தெரிய வந்துள்ளது. புதைக்கப்பட்ட மனிதர்களுடன் அவர்களின் பிற்கால தேவைக்கென மான், நாய், மீன் மற்றும் பறவைகளையும் சேர்த்தே அவர்களது உறவினர்கள் புதைத்துள்ளனர்.
மேலும், சில மண் பொம்மைகளும் அந்த குழிகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. இவை சில மாதங்களுக்கு முன்னர் கோமாகால்கோ பகுதியில் கண்டெடுக்கப்பட்டது போல் மயன் காலத்து கலை நுணுக்கத்தை சார்ந்துள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !