பாகிஸ்தான் பெண்களின் உரிமை மற்றும் குழந்தை கல்வி பற்றி குரல் கொடுத்த மலாலா தற்போது லண்டனில் இருந்து படித்து வருகிறார்.
சமீபத்தில் நடந்த ஐ.நா சபை கூட்டத்தில் குழந்தைகளின் கல்வி பற்றி மலாலா உணர்ச்சிகரமாக பேசினார். இதனால் முன்னால் சர்வாதிகாரி முஷாரப்பை சுட்டுக்கொல்ல முயன்ற தலிபான் தீவிரவாதி ரஷீத் கடந்த 15-ம் திகதி ஒரு கடிதத்தை மலாலாவுக்கு எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், 'நமது நாட்டிற்கு திரும்பிவர நான் உனக்கு அறிவுறுத்துகிறேன். இங்கு வந்து இஸ்லாமிற்கு ஆதரவாகவும், பஷ்தூன் கலாச்சாரத்தை மதித்து நடக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
மேலும், உனது நகருக்கு அருகில் உள்ள பெண்கள் இஸ்லாமிய மதராசவில் இணைய வேண்டும். இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்களின் மோசமான நிலை குறித்து எழுதவும். உலக உத்தரவு என்ற பெயரில் ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையும் கெட்ட கொள்கைகளால் அடிமைப்படுத்த விரும்பும் சக்திகளை தோள் உயர்த்தி காட்டவும்.
தலிபான்கள் பெண்கள் மற்றும் ஆண்களின் கல்விக்கு எதிரானவர்கள் இல்லை. ஆனால் உள்நோக்கத்துடன் எங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம்' என்று கடிதத்தில் எழுதியிருந்தது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !