நம்
பூமியில் கிடைக்கும் தங்கமானது, முன்னொரு காலத்தில் நட்சத்திரங்களுக்குள்
ஏற்பட்ட பெரும் மோதலின் விளைவாக கிடைத்தவை என்று புதிய ஆய்வு ஒன்று
சொல்கிறது.
நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று மோதிக்
கொண்டதின் விளைவாக ஏற்பட்டவைதான் இந்த தங்கம் என்றும் இந்த ஆய்வு
கூறுகிறது. மிகுந்த அடர்த்தி கொண்டவை இந்த நட்சத்திரங்கள் என்றும் அவை மோதி
அழிந்ததில்தான் தங்கம் உண்டானதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
எல்லா இடத்திலும் கிடைக்காது:
தங்கம்
தங்கம் பூமியின் அனைத்து இடங்களிலும் கிடைப்பதில்லை. மிகவும் அரிதானதாக
இது இருக்கிறது. பூமியின் பல இடங்களில் தங்கமே இருப்பதில்லை.
திடீரென பிறந்த தங்கம்:
தங்கம்
ஒரு திடீர் சம்பவத்தின் விளைவாக பிறந்ததே என்றும் விஞ்ஞானிகள் தற்போது
கூறுகின்றனர். அதாவது நட்சத்திரக் கூட்டத்தின் மிகப் பெரிய திடீர்
மோதலில்தான் தங்கம் பிறந்ததாகவும் இந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
காமா ரே கதிர்வெடிப்பு:
காமா கதிர்வீச்சு வெடிப்பு போன்ற ஒன்றுதான் தங்கம் உருவானதற்குக் காரணம் என்பதும் விஞ்ஞானிகளின் கருத்தாகும்.
2 நியூட்ரான் ஸ்டார்களின் மோதல்:
இரண்டு பெரிய நியூட்ரான் நட்சத்திரங்களின் மோதல்தான் தங்கம் உருவாக காரணம் என்பதும் விஞ்ஞானிகளின் கூற்றாகும்.
10 நிலவுகளின் எடைக்குச் சமம்:
இந்த
நியூட்ரான் ஸ்டார்களின் மோதலின்போது ஏற்பட்ட தங்கத்தின் அளவானது 10
நிலவுகளின் எடைக்குச் சமமானது என்றும் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !