திருமங்கலம் அருகே உள்ள மைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 26). கூலிதொழிலாளி. இவரது மனைவி ஜெய்சித்ரா(24). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். ஜெய்சித்ரா வீட்டில் ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருந்தார். அப்போது அவர் அடுப்பில் மண்எண்ணை ஊற்றினார்.
அப்போது மண்எண்ணை கீழேசிந்தி தீப்பிடித்து. இதில் ஜெய்சித்ரா சேலையிலும் தீப்பிடித்தது. தீப்பிடித்ததும் அவர் கூச்சல் போட்டு அலறினார்.
அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்தனர். உடல் கருகிய அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஜெய்சித்ரா இறந்தார்.
இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மதுரை ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !