சுவிஸ் நாட்டை சேர்ந்த 14 வயது சிறுவர்கள் கின்னஸ் சாதனைக்காக டோமினோஸ்(dominos) சுவரை உருவாக்கியுள்ளனர்.
டேனியல் ஹவிலியர்(Daniel Huwiler) மற்றும் ஆஸ்வெல்ட் ஜோன்ஸ்(Oswald Jonas) ஆகிய இருவரும் இணைந்து இந்த சாதனையை படைக்க முயன்றுள்ளனர்.
ஹாங்கன்வில்(Häggenschwil) என்னும் உடற்பயிற்சி மையத்தில் 41,680 டோமினோக்களை கொண்டு 38 மீற்றர் நீளம் மற்றும் 1 மீட்டர் உயரத்தில் இந்த சுவரை 20 நிமிடத்தில் உருவாக்கியுள்ளனர்.
தற்போது உலக சாதனை படைத்திருக்கும் டோமினோ சுவரானது 30 மீற்றர் நீளமுடையது என செய்தித்தாள் ஒன்று கூறியுள்ளது. மேலும் இளவயதினர் இந்த சுவர் கட்டுவதற்கு ஒரு வார காலத்தில் ஒரு நாளுக்கு 10 மணிநேரம் செலவு செய்ய நேரிடும் என டேனியல் ஹவிலியர் கூறியுள்ளார்.
இதனை உருவாக்குவதற்கு கடினமாக உழைக்க வேண்டும் அதனுடன் பொறுமையும் தேவைப்படும். நாங்கள் இருவரும் இணைந்து 7 வருடங்களுக்கு முன்பு இதனை எங்கள் இலட்சியமாக நினைத்து செயல்பட்டோம் அப்போது 200 டோமினோக்கள் சேர்த்தோம்.
தற்போது 75,000 டோமினோக்களை சேமித்துள்ளோம். அதனை சேமிப்பதற்கு வாடகை அறையே தேவைப்படுகின்றது என கூறியுள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !