ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இயங்கி வரும் முன்னணி அமைப்புக்களால் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு நிதி வழங்கப்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்கான தனது பங்கு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டுமென இலங்கை கோரியுள்ளதாக பி.ரி.ஐ. செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
நாட்டிற்கு தற்போது சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள ஆறு பேரடங்கிய ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தூதுக்குழுவுடன் கடந்த சனியன்று நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின் போதே வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு வலியுறுத்தியதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இயங்கி வரும் முக்கியத்துவம் வாய்ந்த புலம்பெயர் தமிழர் அமைப்பொன்றின் ஆதரவு மூலம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தற்போது முனைப்பு பெற்று வருவதாக இந்த வருடம் வெளியாகிருந்த (???) எனப்படும் யூரோ பொலிஸ் அமைப்பின் பயங்கரவாத நிலைவரம் மற்றும் போக்கு குறித்த அறிக்கையை மேற்கோள் காட்டியே அமைச்சர் பீரிஸ் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை அமைப்பொன்றாகக்கருதி ஐரோப்பிய ஒன்றியம் அதனைக்கடந்த 2007 ஆம் ஆண்டில் தடை செய்திருந்தது. இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினர் நேரில் கண்டறிந்துள்ளமை குறித்து தான் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்த அமைச்சர் பீரிஸிடம் தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டு வட புலத்தில் எதிர்வரும் செப்டெம்பரில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல்களை இராணுவப் பிரசன்னமற்ற குடிசார் சூழலொன்றிலேயே அரசாங்கம் நடாத்த வேண்டுமென மேற்படி தூதுக்குழுவினரும் தமது பங்குக்கு வலியுறுத்தினர். தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி வட புலத்தில் நிலை கொண்டுள்ள இராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்குமாறு சர்வதேசத்திடமிருந்து விடுக்கப்பட்ட அழைப்புக்களை அரசாங்கம் நிராகரித்தே வந்துள்ளது. மேற்படி தூதுக்குழுவினர் தேசிய நல்லிணக்கத்தை விரிவான முறையில் எட்டும் பொருட்டு கற்றுக்கொண்டுள்ள பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டியதன் தேவைப்பாட்டையும் வலியுறுத்தினர்.
இலங்கையில் நடைபெற்றிருந்த இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அரச படைகளால் இழைக்கப்பட்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல் தொடர்பிலான போர்க்குற்றங்களுக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டுமென ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானங்களுக்கு இந்தியாவுடன் இணைந்து அதிகளவிலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆதரவளித்திருந்தமை தெரிந்ததே.
Home »
Sri lanka
» சர்வ தேசத்தில் விடுதலைப்புலிகளின் செயற்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை!
சர்வ தேசத்தில் விடுதலைப்புலிகளின் செயற்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை!
Written By TamilDiscovery on Sunday, July 21, 2013 | 10:36 PM
Labels:
Sri lanka
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !