''ஊவா மாகாணத்தில் எச்.ஐ.வி. தொற்றுதலுக்கு உள்ளானவர்களாக ஒன்பது பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் ஐந்து பேர் கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்தவர்களென்பது குறிப்பிடத்தக்கது. ''இவ்வாறு ஊவா சமூக வானொலி நிறுவன பணிப்பாளர் ரஞ்சித் அமரசிங்க தெரிவித்தார்.
மொனராகலை ‘‘மிகிரங்க கெஸ்ட்’’ விடுதியில் நடைபெற்ற எச்.ஐ.வி வேலைத்திட்ட செயலமர்வின் ஊவா வானொலி நிறுவனப் பணிப்பாளர் ரஞ்சித் அமரசிங்க தொடர்ந்து பேசுகையில்:-
‘‘ஊவா மாகாணத்தில் மொனராகலை, பதுளை என்ற இரு மாவட்டங்களில் 26 பிரதேச செயலகங்கள் அமைந்துள்ளன. அவற்றில் ஆகச் சிறிய பிரதேச செயலக எல்லைகளைக் கொண்டது கதிர்காமப் பிரதேச செயலகமாகும். இச் செயலகப் பிரிவிலேயே. எச். ஐ.வி தொற்றுக்குரியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றனர். ஏனைய நால்வரும் ஊவா மாகாணத்தின் ஏனைய பிரதேச செயலகப் பிரிவு இரண்டில் இனம் காணப்பட்டுள்ளனர். இந்நிலைக்கு பல்வேறு காரணங்களை முன்வைக்கக் கூடியதாக இருக்கின்றது.
எச்.ஐ.வி. தொற்றுக்குரியவர்களை சமூகத்திலிருந்து ஓரம்கட்டி விடாமல். அவர்களையும் நாட்டிற்கு பயன்படக் கூடியவர்களாக மாற்ற நாம் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்’’ என்றார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !