வேலூர்: வேலூரில் தனியார் மருத்துவக்கல்லூரியில் நர்சிங் படிக்கும் மாணவி ஒருவர் விடுதியின் 7 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் தொரப்பாடி ராஜா தெருவை சேர்ந்தவர் பாலு (வயது 40). இவரது மனைவி அம்சா, மகள் பவித்ரா(19) வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவ கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் முதலாமாண்டு படித்து வந்தார். இவர் நேற்று மதியம் 2 மணியளவில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள விடுதியில் சாப்பிடு வதற்காக சென்றார். திடீரென பவித்ரா விடுதியின் 7 வது மாடிக்குச் சென்று அங்கிருந்து இருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயம் அடைந்த பவித்ராவை ஊழியர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பவித்ரா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பவித்ராவின் பெற்றோருக்கு மருத்துவமனை நிர்வாகம் இது தகவல் தெரிவித்தது. பதறியடித்து கொண்டு வந்த பெற்றோர்கள் மாணவியின் சடலத்தைப் பார்த்து கதறி அழுதனர். ராகிங் தொல்லையா? பவித்ராவின் மரணம் பற்றி கருத்து கூறிய அவரது உறவினர், பவித்ரா பிஎஸ்சி நர்சிங் முதலாமாண்டு படித்து வருகிறார். நேற்று 1 மணிக்கு மதியம் சாப்பிட சென்றவர் 7-வது மடியிலிருந்து விழுந்து விட்டதாக கூறுகின்றனர்.ஆனால் பெற்றோருக்கு மாலை 4 மணிக்கு தகவல் தெரிவித்தனர். ஏற்கனவே ராக்கிங் தொல்லை இருந்து வந்ததாக பவித்ரா கூறி வந்தார். 7-வது மாடியிலிருந்து விழுந்து இறந்ததாக கூறுவது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவரே விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறி விழுந்து இறந்தாரா என்பது தெரியவில்லை என்றார்.
அதேசமயம் மருத்துவமனை தரப்பில் மாணவி தவறி விழுந்து இறந்ததாக கூறினர் இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !