வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள தியாவட்டவானில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த 55 வயதுடைய நபரொவருரை அப்பகுதி பொதுமக்கள் மடக்கிப் பிடித்து வாழைச்சேனை பொலிஸில் இன்று புதன்கிழமை ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பம் பற்றி தெரியவருவதாவது:-
குறித்த ஏழு வயதுடைய சிறுமி அப்பகுதியிலுள்ள பாடசாலைக்கு சென்று வீடு திரும்பும் வழியில் அவ்வீதியால் வந்த 55 வயதுடைய நபரொருவர் சிறுமியின் பின் பக்கம் மற்றும் கையைப் பிடித்து இழுத்துச் செல்ல முயற்சித்துள்ளார்.
குறித்த் சிறுமி கூச்சலிட்ட சத்தம் கேட்டு வீதியால் சென்ற பொதுமக்கள் இச்சம்பவத்தினை நேரில் கண்டு மேற்படி நபரைப் பிடித்து வாழைச்சேனை பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
வாழைச்சேனை பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !