கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர், குற்றவாளியாக இனங்காணப்பட்டதை அடுத்து, கேகாலை மேல் நீதிமன்றம் அவருக்கு இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு ஜூலை மாதம் 8ம் திகதி எட்டியாந்தோட்டை கல்பாத்த பிரதேசத்தை வசித்த 22 வயதான தீபிகா சுபாஷினி என்ற ஆடை தொழிற்சாலை வேலை செய்த யுவதியை கூரிய ஆயுதத்தினால் குத்தி கொலை செய்ததாக சந்தேக நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
அத்துடன் யுவதியின் தங்க சங்கிலி, கையடக்க தொலைபேசி என்பவற்றை கொள்ளையிட்டதாக தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பில் எட்டியாந்தோட்டை கந்தேவத்தை பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான முருகையா சந்திரமோகன் என்பவருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை தவிர இரண்டு குற்றங்களுக்காக தலா 10 ஆண்டுகள் என இருபது ஆண்டு சிறைத்தண்டனையும், இரண்டு குற்றங்களுக்காக தலா 10 ஆயிரம் ரூபா அபராதம் என 20 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.
கொலை செய்த குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிப்பதாக நீதிபதி நீதிமன்றத்தில் அறிவித்தார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !