ஐரோப்பிய பிராந்தியத்தில் நிலவும் பொருளாதார சரிவு, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் சடுதியாக ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைகளை கருத்தில் கொண்டு 2013ஆம் ஆண்டுக்கான உலக பொருளாதார வளர்ச்சி எதிர்வுகூறலை தரமிறக்கியுள்ளது.
2013ஆம் ஆண்டில் உலகின் பொருளாதார வளர்ச்சி 3.1 வீதமாக அமைந்திருக்கும் என நேற்றைய தினம் அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இவ்வாண்டின் பொருளாதார வளர்ச்சி 3.3 வீதமாக காணப்படும் என எதிர்வுகூறியிருந்தது. சீனா மற்றும் இதர அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் தற்போது ஆபத்தான சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ளதாகவும், ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடைந்துள்ளதாகவும், இதன் காரணமாக உலக பொருளாதார வளர்ச்சி வீதத்தை தரமிறக்க தீர்மானித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !