டெல்லி மெட்ரோ ரயில்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் ஆண் - பெண்களின், பொது இட லீலைகளை பல்வேறு ஆபாச இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளது ஒரு கும்பல்.
இந்தக் கும்பலுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் மற்றும் இந்திய மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் உள்ள சிசிடிவி வீடியோக்கள் எப்படி கிடைத்தன என்பது தெரியவில்லை.
மெட்ரோ ரயில் அலுவலகத்தில் அல்லது மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் பணியாற்றும் யாரோ தான் இந்த வீடியோக்களை இவர்களுக்கு வழங்கியிருக்க வேண்டும் அல்லது அந்த நபரே தான் ஆபாச இணையத்தளங்களில் இந்த வீடியோவை பதிவேற்றம் செய்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. மேலும் இந்த வீடியோக்கள் எம்எம்எஸ்-களாக கையடக்கத் தொலைபேசிகளிலும் பரவி வருகின்றன. மொத்தம் 13 மெட்ரோ ரயில் ஆபாச வீடியோக்கள் இதுவரை இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளனவாம். இதை இதுவரை 1.5 இலட்சம் பேர் பார்த்து இரசித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக இரவு நேரங்களில் ஆட்கள் அதிகமில்லாத பெட்டிகளில் ஏறும் ஆண்-பெண்கள் சிலர் ரயிலில் வைத்தே அருவருப்பான வேலைகளில் இறங்குகின்றனர்.
இதை அதில் உள்ள வீடியோ கேமராக்கள் படம் பிடிக்கின்றன என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது.
தீவிரவாதிகள் தாக்குதல் உள்ளிட்ட செயல்களைத் தடுக்க பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தக் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இதில் இந்த ஆபாசங்களும் ஏராளமாக பதிவாகின்றன. இந்த வீடியோக்கள் தான் ஆபாச இணையத்தளங்களுக்கும் எம்எம்எஸ்களாக கையடக்கத் தொலைபேசிகளுக்கும் போய்ச் சேர்ந்துள்ளன. இதில் முக்கியமான கேள்வி, இந்த வீடியோக்கள் எப்படி வெளியே போயின என்பது தான். இந்த வீடியோ கேமராக்கள் டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேசன் மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) ஆகியோரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன.
இப்போது வீடியோவை கசிய செய்தது யார் என்பது தொடர்பாக இந்த இரு பிரிவினருக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது. இதை நாங்கள் செய்யவில்லை, அவர்கள் தான் செய்திருக்க வேண்டும் என்று டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேசன் மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை இருவருமே ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுகின்றனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !