திருச்சி மேலகாசிப்பாளையத்தில் +1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கோட்டை காவல் சரகத்துக்குள்பட்ட மேலகாசிப்பாளையத்தைச் சேர்ந்த +1 மாணவி வியாழக்கிழமை மதியம் வீட்டில் தனியாக இருந்த போது, வீட்டுக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர், மாணவியை வலுகட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தாராம்.
இதுகுறித்து கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து, தெற்கு சுண்ணாம்புகாரத்தெருவைச் சேர்ந்த த. குமார் என்கிற குமரப்பெருமாளை (25) வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
இவர் ஆதார் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணியில் ஆபரேட்டராகப் பணியாற்றி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து குமாரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !