தமிழீழ உதைபந்தாட்டக் கழகம் (TEFA) என்ற பெயரில் புதிய கால்பந்து அணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அணி பங்கேற்கும் முதல் சர்வதேச கால்பந்தாட்டப் போட்டி பிரிட்டனில் உள்ள ஐலேண்ட் ஆப் மான் என்ற இடத்தில் நடக்கும் டின்வோல்ட் ஹில் சர்வதேச கால் பந்தாட்டப் போட்டியில் பங்கேற்கிறது.
இப்போட்டிகளில் தமிழீழ உதைபந்தாட்டக் கழகத்துடன் Sealand F.A., Alderney F.A., Raetia F.A., Occitania F.A. and St. John´s United F.A. ஆகியவை மோதுகின்றன.
தமிழீழத்தின் தனித்துவத்தை உலகுக்குக் காட்டுவதே தலையாய லட்சியமாகவும், சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் உலகெங்கும் வாழும் ஈழத் தமிழ் கால்பந்தாட்ட வீரர்களும் பங்கேற்கும் வகையில் வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதை இலக்காகவும் கொண்டு இந்த கழகம் செயல்படவிருக்கிறது.
உலகளாவிய தமிழ் இளையோர் அவை (T-League) 2012ம் ஆண்டிலேயே தமிழீழ உதைபந்தாட்டக் கழகத்தை உருவாக்கினாலும், பிரபலமான சர்வதேச போட்டியில் இந்த அணி பங்கேற்பது இதுவே முதல்முறை. சுவிஸ்ட்சர்லாந், பிரான்ஸ், ஜேர்மனி, பிரிட்டன், நோர்வே, இத்தாலி,
கனடா: தமிழீழ உதைபந்தாட்டக் கழகத்தில் சுவிஸ்ட்சர்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, பிரிட்டன், நோர்வே, இத்தாலி, கனடா ஆகிய நாடுகளில் வாழும் ஈழத் தமிழ் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
தமிழீழ உதைபந்தாட்டக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பிரவீன் நாகேந்திரம் இதுகுறித்துக் கூறுகையில்,
"இனப்படுகொலைக்கு தமிழீழத்தில் முகங் கொடுத்துவரும் எமது சகோதரர்களின் நிலைபற்றி அறிவோம். அவர்களும் தமிழீழத்தின் சார்பில் இப்போட்டிகளில் பங்கு பெறும் ஒரு நாள் நிச்சயம் உருவாகும். அதுவே எமது எதிர்பார்ப்பு," என்றார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !