இந்தியா, இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் இருந்து கொழும்புக்கு கடத்த முயன்ற 6 கிலோ கஞ்சாவை கியூ பிரிவு போலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இராமநாதபுரம் பாம்பன் அண்ணாநகரைச் சேர்ந்த அருளானந்தம் என்பவரின் மகன் வேளாங்கண்ணி (25), தங்கச்சிமடம் கருப்பையா என்பவரின் மகன் நாகராஜ் (47) இருவரும், வேளாங்கண்ணியின் சகோதரர் அஜீத் என்பவரின் படகில் சென்றனர்.
ஏர்வாடியில் இருந்து இலங்கைக்கு அவர்கள் கஞ்சாவைக் கடத்திச் செல்ல முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், தனுஷ்கோடி அருகே ஓட்டப்பட்டி கடற்கரையில் இவர்களின் படகு பழுதாகி நின்றது.
இது குறித்து தகவல் அறிந்த கியூ பிரிவு பொலிஸார் அந்தப் பகுதிக்குச் சென்று படகை சோதனை செய்தனர். அதில், 6 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனைக் கைப்பற்றிய பொலிஸார் படகில் வந்தவர்களைத் தேடினர்.
இந்நிலையில், படகின் உரிமையாளர் அஜீத் உள்பட 3 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை கியூ பிராஞ்ச் பொலிஸார் தேடி வருகின்றனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !