எப்போதும் இல்லாத அளவு தற்போது பூமியின் மீது வெப்பம் தாக்குவதாக, அவுஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து பல்கலைக்கழக விஞ்ஞானி ஜான்குக் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதற்கு அளவுக்கு அதிகமான கார்பன்- டை-ஆக்சைடு பூமியின் மேற்பரப்பில் படிந்து இருப்பதே காரணமாகும். இதனால் தான் வெப்பம் கடுமையாக உள்ளது.
இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் ஹிரோஷிமா நகரம் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. அதைப்போன்று 4 அணுகுண்டு வீசினால் ஏற்படும் அளவுக்கு வெப்பம் அதிகரித்துள்ளது. இந்த வெப்பம் பூமியின் மீது ஒவ்வொரு வினாடியும் தாக்குகிறது. இதே நிலை இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்ததால் நிலைமை என்னவாகும் என நினைத்துகூட பார்க்க முடியவில்லை.
பூமியை தாக்கும் 90 சதவீதம் வெப்பம் கடலுக்குள்தான் செல்கிறது. இதனால் பனிமலைகள் மற்றும் விலங்கினங்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன என்று கூறியுள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !