நெல்சன் மண்டேலாவின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேகப் சூமா தெரிவித்துள்ளார். ஜொஹான்னர்ஸ்பேர்கில் ஊடகவியலாளரை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வைத்தியர்கள் மண்டேலாவை (94) ஆரோக்கியமாக வைத்திருக்கும் பொருட்டு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நெல்லசன் மண்டேலா கடந்த 17 நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவரது உடல் நிலை கடந்த சில காலங்களாகவே மோசமடைந்து வந்ததுடன் அடிக்கடி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு வந்தார்.
நுரையீரல் அழற்சியாலும் அவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவரின் ஆரோக்கியத்திற்காக அனைவரும் பிராத்திக்கும் படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !