ஆக்ரா: பேஸ்புக்கை பயன் படுத்தி விபச்சாரம் செய்த 11 பேரை ஆக்ரா போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரம் ஆக்ரா.
காதல் சின்னமான தாஜ்மஹால் இங்கு இருப்பதால், சுற்றுலாப்பயணிகள் அதிகம் குவிகின்றனர். அக்கம் பக்கத்தினரின் புகாரின் பேரில், ஆக்ராவின் ந்ஸ்பி பவன் குமார் தலைமையில் நேற்று பல்கேஸ்வரில் உள்ள கோவிந்த் புரி தெருவில் உள்ள இரு வீடுகளில் சோதனை நடத்தினர். அதில் அந்த வீடுகளில் விபச்சாரம் நடப்பது உறுதியானது. அதனைத் தொடர்ந்து, விபச்சாரக்கும்பலைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசாரின் சோதனையில் அந்த வீட்டில் பீர் பாட்டில்கள், ஆணுறைகள் மற்றும் சாராய பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.
போலீசாரின் விசாரணையில், விபச்சார புரோக்கர்கள் கஸ்டமர்களைப் பிடிப்பதற்கு பேஸ்புக்கை பயன்படுத்தியது தெரிய வந்தது. போலியான அடையாளங்களுடன் கூடிய பேஸ்புக் அக்கவுண்ட்களை அவர்கள் உருவாக்கி பயன் படுத்தியுள்ளார்கள். மேலும், இந்தக் கும்பலோடு தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !