அமெரிக்க அரசு வருகிற 2017ம் ஆண்டுக்குள் 80 ஆயிரம் இராணுவ வீரர்களை டிஸ்மிஸ் செய்ய திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க அரசு உலகிலேயே இராணுவத்துக்கு மட்டும் பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்குகிறது. மேலும் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக நேட்டோ படைகளுக்கு இராணுவ வீரர்களை சப்ளை செய்து வருகிறது. இதில் ஏராளமான அளவு பணம் செலவாவதால், பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் 2017ம் ஆண்டுக்குள் இராணுவத்தின் வலிமையை 5 லட்சத்து 70 ஆயிரம் வீரர்களில் இருந்து 4 லட்சத்து 90 ஆயிரமாக குறைக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் சுமார் 80 ஆயிரம் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தலைமை தளபதி ரேமண்ட் ஒதர்னோ கூறியுள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !