இந்தியாவின் தமிழ்நாடு மத்திய புழல் சிறையில் நடாத்தப்பட்ட திடீர் தேடுதல் நடவடிக்கையில் இலங்கை பிரஜைகளிடம் இருந்து போதை பொருட்கள் மீட்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவரூபன் எனப்படும் சுவாமிநாதன் மற்றும் ஜோசப் பெனாண்டோ ஆகிய இருவரிடம் இருந்தே போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
சிவரூபனிடம் இருந்து ஹெரோயினும் ஜோசப்பிடம் இருந்து 23 பைக்கற் கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !