நிறமூட்டப்பட்ட கண்ணாடிகளை போன்று காட்சியளிக்கும் இக்கலைப்படைப்புகளானது வெறுமனே பல வர்ணங்களை கொண்ட கண்ணாடிகளால் உருவாக்கப்பட்டவை என நினைக்கக்கூடும்.
ஆனால் இவை கண்ணாடிகளால் செய்யப்பட்ட கலை ஆக்கங்கள் அல்ல.
இக்கலைப்படைப்புகளானது முற்றுமுழுதாக காகித அடுக்குகளை கொண்டு கவனமாக வெட்டி எடுக்கப்பட்ட காகித சிற்பங்களாகும்
ஓவியரான எரிக் ஸ்டேன்டிலி என்பவரே இத்தகைய காகித சித்திரங்களை உருவாக்கியுள்ளார். இவருக்கு இவ்வாறான கலைப்படைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இவர் விபதொன்றை எதிர்நோக்கிய சந்திர்பத்திலேயே தோன்றியதாக அவர் கூறியுள்ளார். தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றில் இணை ஓவியத்துறை பேராசிரியராக இவர் செயற்பட்டு வருகின்றார்.
வெவ்வேறு நிறமுடைய 100 காகித அடுக்குகளை கொண்டு மேற்படி ஒவ்வொரு காகித சிற்பங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றை வடிவமைத்து முடிப்பதற்கு ஒவ்வொன்றிற்கும் 80 மணித்தியாலங்கள் எடுத்தன. சுமார் இரண்டு வருடங்களை காகித சிற்பங்களுக்காக அவர் செலவிட்டுள்ளார்.
சுமார் 134 காகித அடுக்குகள் இக் காகித சிற்பத்திற்காக செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !