டெல்லி: இந்தியாவில் உள்ள 6 கோடி பெண்கள் இணையதளத்தை உபயோகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தினசரி வாழ்க்கையை நகர்த்த தேடுதல் அவசியமாகிறது. வீட்டிற்குள் அமர்ந்து விரல் நுனியில் தேடுவதுதான் இன்றைய டிரென்ட். இந்தியா முழுவதும் 15 கோடி மக்கள் இணையதளத்தை உபயோகிப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 6 கோடி பேர் பெண்கள் என்று கூகுள் தகவல் வெளியிட்டுள்ளது. உமன் அன்ட் வெப் ஸ்ட்டி நடத்திய சர்வேயில் இது தெரியவந்துள்ளது. உணவுப் பொருட்கள், நகைகள், உடைகள் என பல வித பொருட்களை பெண்கள் இணையத்தில் தேடுகின்றனர்.
ஆயிரம் பெண்கள் 18 முதல் 65 வயதுவரை உடைய 1000 பெண்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். அவர்களிடம் இணைய தளத்தில் தேடும் பொருட்கள் பற்றியும் தேடுதல் முறை பற்றியும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.
அழகு சாதனங்கள் சருமபாதுகாப்பு, கூந்தல் பராமரிப்பு, உணவு, பானங்கள் போன்றவைகள் அதிகம் தேடும் பொருட்களாக தெரியவந்துள்ளது. செல்போன் பற்றி 25 சதவிகிதம் பெண்கள் தேடுகின்றனராம்.
6 கோடி பேர் இந்தியாவில் 6 கோடி பெண்கள் இணைய சேவையைப் பயன்படுத்தி வருவதாக கூகுள் தெரிவித்துள்ளது. இதில் இரண்டு கோடியே 40 லட்சம் பெண்கள் நாள் தவறாமல் இணைய தளங்களைப் பயன்படுத்துவது ஆய்வில் தெரிய வந்திருக்கிறதாம்.
மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் மின்னஞ்சல் மற்றும் சமூக வலைதளங்களை இன்றைய இளம் தலை முறைப் பெண்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். தவிர ஆடை, அணிகலன்கள் குறித்தும் இணையதளங்களில் பெண்கள் தகவல் தேடுவதாக கூகுள் தெரிவித்துள்ளது.
6 கோடி இந்தியப்பெண்களும் இணையத்தில் தேடுவது என்ன?
Written By TamilDiscovery on Sunday, June 23, 2013 | 12:31 PM
Related articles
- பாபுவின் ஆசிரமத்திற்குள் கருக்கலைப்பு நிலையம்!
- இந்தியக் கடல் எல்லையில் அமெரிக் கப்பலில் ஆயுதக கடத்தல்?
- சாதுவின் கனவில் மன்னர்: 1,000 டன் தங்கப் புதையலை!
- ஆட்டையைப் போட்ட ஆட்டுடன் நகரமுடியாமல் தவிக்கும் மலைப் பாம்பு.
- நள்ளிரவில் தனியாக வெளியே வந்த ராகுல்: மர்மப் பெண்ணுடன் உரையாடல்!
- பேஸ்புக் அரட்டைக்குத் தடை: மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!
Labels:
India
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !