ஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் முதன்முறையாக 25 வயதான பெண் ஒருவர் போர் விமான ஓட்டுநராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆயிஷா பரூக் என்ற 25 வயது இளம் பெண்ணான இவர் பஞ்சாப் மாநிலம் பஹவல்பூர் ஊரைச் சேர்ந்தவர். போர் விமானங்களில் பணியாற்ற முறையான பயிற்சி பெற்ற ஆயிஷா, பாகிஸ்தானில் போர் விமானத்தை இயக்கப்போகும் முதல் பெண் விமானி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
பயிற்சியில் தேர்வு:
ஆயிஷாவோடு சேர்த்து மொத்தம் 19 பேர் பயிற்சியில் சேர்ந்தார்களாம். ஆனால், அவர்களில் ஆயிஷா ஒருவர் மட்டுமே பாகிஸ்தான் விமானப் படைக்குத் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆணும், பெண்ணும் சமம்:
இது குறித்தி ஆயிஷா கூறும்போது, இஸ்லாமிய நாட்டில், பெண் ஒருவர் இதுபோன்ற பணிக்கு வருவது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், இதில் மிகப்பெரிய வித்தியாசம் எதுவும் எனக்குத் தெரியவில்லை. விமானத்தில் இருந்து குண்டுகளைப் போடும் போது மற்ற விமானிகளைப் போலவே நானும் செயல்படுவேன்' என்கிறார்.
கடுமையான பயிற்சியின் பலன்:
விமானப்படையில் சேர்ந்து போர் விமானம் ஓட்ட வேண்டும் என்பதற்காக ஆயிஷா கடந்த ஏழு ஆண்டுகளாக கடுமையான பயிற்சியில் ஈடுபட்டாராம். அதன் பலனாகவே, தற்போது இந்த பெருமைக்குரிய பணியை அடைந்திருப்பதாக ஆயிஷாவின் அம்மா தெரிவித்துள்ளார்.
சொந்தக்காலில் நில்லுங்கள்:
இது போன்ற போர்ச்சூழல் உள்ள நாட்டில், பெண்கள் கட்டாயம் தங்கள் சொந்தக் கால்களில் நிற்கப் பழகிக் கொள்ள வேண்டும். விமானத்தில் இருந்து குண்டு போடுவதற்கு ஆண், பெண் என்ற பேதமில்லை என கருத்து தெரிவித்துள்ளார் ஆயிஷா.
ஆணெண்ண... பெண்ணெண்ண:
ஆயிஷா சொவதை உண்மை யென ஆமோதித்து, அவரை வாழ்த்துகின்றனர் அவரது சகாக்கள். மேலும், குண்டு போடும் செயலில் நாங்கள் எதையும் வித்தியாசமாகச் செய்து விடவில்லை. எனவே, பெண்களும் இத்துறைக்குப் பொருத்தமானவர்களே என்கிறார் முஷாப் என்ற 26 வயது ஆண் விமானி ஒருவர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !