Headlines News :
Home » » 120 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் பிறந்த நாள்(happy birthday to yo song)பாடலுக்கு நஸ்ட ஈடு கோரி வழக்கு!

120 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் பிறந்த நாள்(happy birthday to yo song)பாடலுக்கு நஸ்ட ஈடு கோரி வழக்கு!

Written By TamilDiscovery on Sunday, June 16, 2013 | 6:03 AM

நியூயார்க்: ஆங்கிலம் தெரியாத நம்ம கிராமத்து அப்பத்தாக்கள் கூட, தங்கள் கொள்ளு பேரன், பேத்திகளை ஆங்கிலத்தில் ‘ஹாப்பி பர்த் டே டூ யூ' எனத் தான் பாடி வாழ்த்துகிறார்கள். அந்தளவுக்கு பிரபலமானது அந்தப் பிறந்தநாள் வாழ்த்துப்பாடல். ஆனால், தற்போது அந்தப் பாடல் எங்களுக்குத் தான் சொந்தம். எங்கள் அனுமதியில்லாமல் யாராவது அந்தப் பாடலைப் பயன் படுத்தினால் நஷ்ட ஈடு தர வேண்டும் எனக் கூறி பிரபல நிறுவனம் ஒன்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதனை எதிர்த்து, ஹேப்பி பர்த்டே பாடல் அனைவருக்கும் சொந்தம் என உத்தரவிடக் கோரி வழக்கு ஒன்று அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.

சர்ச்சையில் ‘ஹேப்பி பர்த் டே’... ‘ஹேப்பி பர்த்டே டூ யூ. இந்த பாடல் எழுதி இசையமைக்கப்பட்டு 120 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், தற்போது இந்த பாடல் யாருக்கு சொந்தம் என்பது குறித்து பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.

சட்டவிரோதம்:
இதற்கு கண்டனக் குரல் வழுத்து வரும் நிலையில், ‘இப்பாடல் பொதுச்சொத்து. யாரும் இதற்கு உரிமை கோர முடியாது. நஷ்ட ஈடு வசூலிப்பது சட்ட விரோதமானது' என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது.

குட் மார்னிக் டூ ஆல்:
1893ம் ஆண்டு அமெரிக்காவின் பேட்டி மற்றும் மைல்ட்ரெட் ஹில் சகோதரிகளால் உருவாக்கப்பட்ட ‘குட் மார்னிங் டு ஆல்' என்ற பாடலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதே, 'ஹேப்பி பர்த்டே டு யூ'.

நஷ்ட ஈடு வசூல்:
1998ம் ஆண்டு வார்னர் சேப்பல் நிறுவனத்தார் இதன் காப்புரிமை தங்களுடையது என அறிவித்தது, பல கோடி செலவிட்டு தாங்களே அதன் காப்புரிமை பெற்றதாக கூறி, அவர்களது முன் அனுமதியின்றி அப்பாடலைப் பயன் படுத்திய பலரிடம் இருந்தும் தொடர்ந்து நஷ்ட ஈடு வசூலித்து வருகிறது வார்னர் சேப்பல்.

பொதுச் சொத்துங்க:
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக சட்ட பள்ளி பேராசிரியர் ராபர்ட் ப்ரவுனிஸ், 'ஹேப்பி பர்த்டே டூ யூ பாடலை தனி நபர் யாரும் உரிமை கோர முடியாது. அதற்கான எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை' எனத் கூறியுள்ளார்.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template