அமெரிக்காவுக்கு சொந்தமான 22 சக்தி வாய்ந்த அணு குண்டுகள் நெதர்லாந்தில் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக நெதர்லாந்து முன்னாள் பிரதமர் ரூட் லுபர்ஸ் தெரிவித்துள்ளார்.
நேஷனல் ஜியாக்ரபி என்ற அலைவரிசைக்கு அளித்த பேட்டியொன்றின் போதே லுபர்ஸ் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது,
1982 முதல் 94 வரை அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 22 சக்தி வாய்ந்த அணு குண்டுகள் பர்பண்ட் நகரில் உள்ள வோல்கெல் விமானப்படை தளத்தில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.
2013 வரை அவை இங்கேயே இருக்கும் என நான் நினைத்ததில்லை என்று அவர் கூறியுள்ளார். இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா, நாகாசாகி நகரங்களில் மீது வீசப்பட்ட அணுகுண்டுகளை விட 4 மடங்கு வீரியம் கொண்ட அணுகுண்டுகளை அமெரிக்கா நெதர்லாந்தில் பதுக்கி வைத்துள்ளது என்று நீண்ட காலமாகவே கூறப்பட்டு வந்தது.
இந்தநிலையில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் அளித்துள்ள பேட்டி, அந்த வாதத்திற்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !