இந்தியாவில் கடந்த ஆண்டில் (2012) மாத்திரம் 8541 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவது அதிகரிக்கப்பட்டு வருவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2007ம் ஆண்டு 5045 சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கை 2008ல் 5446 ஆக உயர்ந்து, 2009ல் 5336 ஆக குறைந்துள்ளது.
எனினும், 2010ல் 5484 ஆக உயர்ந்து 2011ல் 7112 ஆக எகிறி, கடந்த (2012) ஆண்டு 8541 சிறுமிகள் காமுகர்களுக்கு விருந்தாகியுள்ளனர் என்பதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இதேவேளை, இந்த 6 ஆண்டுகள் கணக்கெடுப்பில், 2007ம் ஆண்டைத் தவிர்த்து, ஏனைய ஐந்து ஆண்டுகளிலும் இந்திய மத்திய பிரதேச மாநிலம் தான் சிறுவர் துஷ்பிரயோகத்தில் முதலிடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய பிரதேசத்தில் 2007ம் ஆண்டில் 1043 சிறுமிகளும், 2008ல் 892 சிறுமிகளும், 2009ல் 1071 சிறுமிகளும், 2010ல் 1182 சிறுமிகளும், 2011ல் 1262 சிறுமிகளும், கடந்த (2012) ஆண்டில் மட்டும் 1632 சிறுமிகளும் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !