Headlines News :
Home » » நூதன முறையில் பழிவாங்கிய காதலன்: காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம்!

நூதன முறையில் பழிவாங்கிய காதலன்: காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம்!

Written By TamilDiscovery on Monday, July 8, 2013 | 9:49 AM

காதலை ஏற்க மறுத்த இளம் பெண்ணை, பெண் வேடமிட்டு ஆசிட் ஊற்றி கொலை செய்த காதலனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானர் நகரில் உள்ள அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் தினேஷ் சங்லா என்ற மாணவன் முதலாம் ஆண்டு படித்து வந்தான். இந்நிலையில் தன்னுடன் படித்து வந்த சவுத்ரி என்ற பெண்ணின் மீது காதல் கொண்டான். ஆனால் தினேஷின் காதலை ஏற்றுக்கொள்ள சவுத்ரி மறுத்து விட்டதால், அவனை பழிவாங்க முடிவு செய்தான்.

இதனையடுத்து மாணவிகள் விடுதிக்குள் பெண் வேடத்தில் நுழைந்த தினேஷ், சவுத்ரி மீது ஆசிட்டை ஊற்றினார். உடனே சவுத்ரி தப்பியோட முயன்ற போது, மடக்கி பிடித்து கத்தியால் குத்தி கொன்றான்.

இந்நிலையில் பொலிசார் கைது செய்யும் முன்னர், தன்னுடைய இரண்டு கையின் மணிக்கட்டு நரம்புகளையும் கத்தியால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற தினேசை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template