இளவரசன் மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இறப்பதற்கு முன் இளவரசன் எழுதிய கடிதம் கிடைத்தது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இளவரசன் மரணம் தொடர்பான வழக்கு தருமபுரி ரெயில்வே பொலிசிடம் இருந்து, அதியமான்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அரூர் துணை பொலிஸ் சூப்பிரண்டு சம்பத் இந்த வழக்கை விசாரித்து வருகிறார். நேற்று அவர் குர்லா எக்ஸ்பிரஸ் ரெயில் டிரைவர்கள் மோகன்குமார், சுரேஷ்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.
ரெயில் அந்த வழியாக சென்ற நேரம், ரெயில் முன் பாய்ந்து யாரும் தற்கொலை செய்து கொண்டாரா? இது பற்றி ரெயில் ஸ்டேசன் மாஸ்டரிடம் தகவல் தெரிவித்தீர்களா என்பது உள்ளிட்ட கேள்விகளை அவர்களிடம் கேட்டார். மேலும் தற்கொலை செய்வதற்கு முன்பு இளவரசன் எழுதிய கடிதம் தொடர்பாக மேற்கு மண்டல ஐ.ஜி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் முன்னிலையில் தருமபுரி மாவட்ட எஸ்.பி அஸ்ரா கார்க் மற்றும் அரூர் துணை பொலிஸ் சூப்பிரண்டு சம்பத் ஆகியோர் இளவரசனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உட்பட 9 பேரிடம் விசாரணை நடத்தினர்.
இளவரசன் அந்த கடிதத்தில், எனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை, நான் மட்டுமே காரணம் என எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !