பிரபல இந்திய நடிகை ஒருவரை கனடா விமான நிலையத்தில் சுமார் 5 மணிநேரமாக விசாரணை என்ற பெயரில் கொடுமைப்படுத்தியுள்ளனர்.
அமெரிக்காவில் இந்திய திரையுலக பிரபலங்கள் அவமானப்படுவது வழக்கம்.
ஆனால் தற்போது மாற்றாக கனடா விமான நிலையத்திலும் இந்த சோதனை நடந்துள்ளது. பிரபல இந்திய நடிகை ரிதுபர்னா செங்குப்தா என்பவரே டொரண்டோ பியர்சன் விமான நிலையத்தில் சோதனைக்கு ஆளாகி உள்ளார்.
இவர் விமான நிலையத்தில் வந்து இறங்கிய உடனேயே, உங்களது விசா முடிந்து போய் விட்டது என்று கூறி விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளார்கள். ஆனால் 2015ம் ஆண்டு வரை தனக்கு விசா காலம் இருப்பதை ரிதுபர்னா சுட்டிக் காட்டியும் அதை அங்குள்ள அதிகாரிகள் ஏற்கவில்லையாம். ரிதுபர்னாவின் விசாவை மட்டும் விசாரிக்காமல், அவர் கொண்டு வந்திருந்த பொருட்களையெல்லாம் சோதனையிட்டார்களாம்.
இந்த சோதனையால் ஏற்பட்ட விரக்தியால் ரிதுபர்னா அழுதுள்ளார். இதைப் பார்த்த அதிகாரிகள் அவர் மன நிலை பாதித்தவராக இருக்கலாம் என்றும், மருத்துவமனைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள். இதுகுறித்து ரிதுபர்னா கூறுகையில், எனது விசாவை வைத்து பெரும் பிரச்சினையாக்கி விட்டார்கள். சரி விசாவைக் கேன்சல் செய்து என்னை திருப்பி அனுப்புங்கள் என்றால் அதுவும் முடியாது என்று கூறினார்கள். இப்படி நீண்ட நேர அலைக்கழிப்புக்குப் பின்னர் ஒரு வழியாக கனடாவுக்குள் நுழைய ரிதுபர்னாவை அதிகாரிகள் அனுமதித்தனராம்.
ரிதுபர்னாவுடன் அவரது 80 வயதான மாமனார், மாமியாரும் உடன் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !