இந்த அதிவேக நெடுஞ்சாலையை நேற்று காலை 9.47 க்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேலியகொட நுழைவாயிலில் வைத்து வாகனப் போக்குவரத்திற்காக அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
கொழும்பு - கட்டுநாயக்கா அதிவேக வீதியில் பொதுமக்கள் பயணம்:
ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்ட கொழும்பு - கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலை 27/10/2013 மாலை 6 மணி முதல் மக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்பட்டுவுள்ளது.கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இருபது நிமிடங்களில் சென்றடையக்கூடிய வசதியுடன் அமைக்கப்பட்டிருக்கும் கொழும்பு - கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலை 25.8 கிலோ மீற்றர் நீளமுடையது.
தினசரி சுமார் 15000 வாகனங்கள் பயணிக்கும் இந்த வழி திறப்பதையிட்டு அன்றாடம் நீர்கொழும்பு, கண்டி மார்க்க வீதிகளில் வாகன நெருக்கடி பெருமளவு குறையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
களனி தோரணைச் சந்தி, மற்றும் பேலிய கொடை தற்போதைய மீன் சந்தைக்கருகில் அதிவேக பாதைக்கு உட்புகும் நுழைவாயில் அமைக்கப்பட் டுள்ளது. இடைவெளியில் ஜா எலையிலும் நுழைவாயிலொன்றுள்ளது.
பேலியகொடையிலிருந்து நுழைவு கட்டணம் 300/- ரூபா, ஜா எலயிலிருந்து 200/- ரூபா நுழைவு கட்டணம் அறவிடப்படும்.
ஒன்பதுக்கு மேற்பட்ட ஆசனங்களைக் கொண்ட வாகனங்களுக்கு 33 ஆசனங்கள் வரை 350 முதல் 450 ரூபா வரையும், ஜா எலயிலிருந்து 300 ரூபாவும் நுழைவு கட்டணமாக அறவிடப்படும்.
அதிவேக நெடுஞ்சாலையில் அரசு பேருந்துச் சேவை:
கட்டுநாயக்கா - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ் போக்குவரத்து இன்று (28) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இன்று காலை 7.00 மணிக்கு போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம தலைமையில் இந்த போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான 13 பஸ்கள் இங்கு சேவையில் ஈடுபடவுள்ளன.
இந்த பஸ்கள் கொழும்பிலிருந்து யா-எல, கொழும்பிலிருந்து கட்டுநாயக்கா, கொழும்பிலிருந்து நீர்கொழும்பு வரை சேவையில் ஈடுபடவுள்ளன.
கொழும்பிலிருந்து நீர்கொழும்புக்கு 150 ரூபா அறவிடப்படும்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !