இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள தேம்ஸ் நதியில் சுற்றுலாப் படகொன்று தீப்பிடித்து எரிந்துள்ளதுடன் அதில் இருந்த சுமார் 30 பயணிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
லண்டன் தீயணைப்பு படையினர் எரிந்து கொண்டிருந்த படகில் இருந்த பயணிகளை காப்பாற்றியுள்ளனர்.
நீரில் நனைந்த மற்றும் குளிரில் பாதிக்கப்பட்டுள்ள 28 பயணிகளுக்கு இரண்டு குழுவினர் சிகிச்சையளித்து வருவதாக லண்டன் அம்பியுலன்ஸ் சேவை தெரிவித்தது.
சிறு காயங்ளுக்கு உள்ளன ஒருவரும், முன்னெச்சரிக்கையாக மற்றுமொரு நபர் என இரண்டு பேர் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீப்பற்றிய படகு லண்டன் டக்டுவர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது என நம்பப்படுகிறது.
இந்த சம்பவம் பற்றி தற்போது எந்த கருத்துக்களை வெளியிட முடியாது என அந்த நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜோன் பிக்கோஸ் கூறினார்.
அதேவேளை படகில் இருந்தவர்கள் ஆற்றில் குதித்ததாக நேரில் கண்ட ஒருவர் பி.பி.சியிடம் தெரிவித்தார்.
இந்த தீ காரணமாக சுற்றுலாப் படகு 30 வீதம் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !