யாழ்ப்பாணம் வடமராட்சி இமையாணண் பகுதியில், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இவர், 49 வயதுடைய லம்போ என்றழைக்கப்படும் சித்திரன் கந்தசாமி எனத் தெரியவந்துள்ளது.
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட, முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினரான சித்திரன் கந்தசாமிக்கு திருமணமாகவில்லை, பெற்றோருடனேயே வசித்து வந்தார். இந்தநிலையில் இவர் இமையாணன் பகுதி பனங்காணி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
சடலம் வல்வெட்டித்துறை அரசினர் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு, அங்கு இடம்பெற்ற பிரேத பரிசோதனைகளின் பின்னர் குடும்பத்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் கொழும்புத்துறை சுண்டுக்குழி வீதியைச் சேர்ந்த 32 வயதுடைய யோகராஜா சிறிகாந்த என்பவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ் மாவட்டத்தில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை மரணப் பதிவேடு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
யாழ் மாவட்டத்தில் 2012 ஆம் ஆண்டை விட தற்போது ஆறு மாதத்தில் தற்கொலை செய்து கொள்பவர்களின் வீதம் அதிகரித்துள்ளதாகவும், இவற்றில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட இரண்டு மடங்காக இருப்பதாகவும் அந்த மரணப் பதிவேடு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு யாழில் தற்கொலைகள் அதிகரிப்பதற்கு குடும்ப வறுமை, மற்றும் பொருளாதார நெருக்கடி, குடும்ப வன்முறைகள், கடன் தொல்லை, தொழில் வாய்ப்பின்மை, காதல் தோல்வி மற்றும் கள்ளக் காதல் விவகாரம், இளவயதுத் திருமணங்கள் போன்றன அடிப்படைக் காரணங்களாக இனங்காணப்பட்டுள்ளன.
எனினும் எதிர்வரும் காலங்களின் தற்கொலை வீதத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை, யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் உளவள நிறுவனங்கள் இணைந்து மேற்கொள்ளவுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை அறிவித்துள்ளது.
தொடர்புடைய செய்தி
தொடர்புடைய செய்தி
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !